கனடாவில் கனானாஸ்கிஸில் அவசரநிலை பிரகடனம்
கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கனானாஸ்கிஸ் பகுதியில் பெய்த தொடர் கனமழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அல்பர்ட்டா அரசாங்கம் அப்பகுதியில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக அப்பகுதியின் முக்கிய போக்குவரத்து பாதையான 'ஹைவே 40' வீதியின் பெரும் பகுதி மூடப்பட்டுள்ளது.
இவான் தாமஸ் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, வாகனங்கள் விழும் அளவுக்குப் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் லிட்டில் ஹைவுட் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவினால் போக்குவரத்து முற்றாக முடங்கியுள்ளது.
இந்த வெள்ளப் பெருக்கினால் சுமார் 2,000 பேர் வரை நேரடியாகப் பாதிக்கப்பட்டு, வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர்" என அல்பர்ட்டா பூங்காக்களின் அவசரக்கால மேலாண்மை இயக்குநர் மைக்கேல் ராய்க்ராஃப்ட் தெரிவித்துள்ளார்.
அதிர்ஷ்டவசமாக இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.