கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்....இசை நிகழ்ச்சியில் முட்டைவீச்சு!
கனேடியத் தமிழர் பேரவை வருடந்தோறும் தமிழர் தெருவிழா எனும் நிகழ்வினை நடத்திவருகின்ற நிலையில், இதன் பத்தாவது வருடமாக இந்த மாதம் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் குறித்த விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இம்முறை இடம்பெற்ற கனேடிய தமிழர் பேரவையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் மக்கள் விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என கனடாவில் உள்ள சில தமிழ் அமைப்புகளும் சில செயற்பாட்டாளர்களும் கனடா வாழ் தமிழ் மக்களைக் கோரியிருந்தனர்.
தமிழர் தெருவிழா 2024 நிகழ்ச்சி
தமிழர் தெருவிழா 2024 நிகழ்ச்சி வழமை போல அல்லாது இந்த வருடம் முதன்முதலாக மாபெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.
தென்னிந்தியாவிலிருந்து பாடகராக இணைந்து கொண்ட பிரபல பின்னணி திரை இசை பாடகர் சிறிநிவாஸ் மீது பாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாளர்கள் முட்டைகளை வீசி எதிர்ப்பை வலுப்படுத்தினர்.
கனடா தமிழர் தெரு விழாவில் அமளி, துமளி!
— Worldwide Tamils (@senior_tamilan) August 25, 2024
தமிழக பாடகர் ஸ்ரீநிவாஸ் மீதும் முட்டை வீச்சு தாக்குதல்?
பொலிஸ் பாதுகாப்போடு அழைத்துச் செல்லப்பட்டார் ஸ்ரீநிவாஸ்.
(வீடியோ: சமூக வலைத்தளம்) #Tamil #StreetFestival #Canada #WWTnews #WorldwideTamils pic.twitter.com/xywru9dkuf
இதன் காரணமாக நிகழ்வு இடைநிறுத்தம் செய்யப்பட்டதுடன் அங்கிருந்த பொலிஸார் தென்னிந்திய பாடகரை பாதுகாப்பாக அழைத்து செல்லும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள அதேவேளை நிகழ்வுக்கு வந்திருந்த சிலர் அநாகரீகமாக நடந்துகொண்டுள்ளமை தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.