9 ஆயிரம் ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்ட முக்கிய நிறுவனம்!
கடந்த சில காலமாக டுவிட்டர், முகநூல், அமேசான் போன்ற முக்கிய பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.
பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் ஏற்கனவே 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக மேலும் 9 ஆயிரம் ஊழியர்களை அடுத்த சில வாரங்களில் பணிநீக்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த தகவலை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜாசி, ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த பணிநீக்க நடவடிக்கை அமேசான் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.