இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடர்பில் பிரபல அமெரிக்க பாடகி வெளியிட்ட தகவல்!
இந்தியாவின் பிரதமராக மோடியே மீண்டும் வேண்டுமென நிறைய பேர் விரும்புவதாக பிரபல அமெரிக்க பாடகி மெரி மில்பென் தெரிவித்துள்ளார்.
பிரபல அமெரிக்க பாடகியான மெரி மில்பென் பல்வேறு ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு (2023) பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மெரி மில்பென் இந்திய தேசிய கீதத்தை பாடி கவனம் பெற்றார். மேலும் அவருக்கு இந்தியாவில் பல ரசிகர்கள் உள்ளனர்.
இந்tha நிலையில், பாடகி மெரி மில்பென் செய்தி முகமை ஒன்று நேற்று பேட்டியளித்தார்.
இதன்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பாதையில் உள்ளார் என்று அவர் கூறினார்.
மெரி மில்பென் மேலும் தெரிவித்ததாவது,
இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவிற்கு பிரதமர் மோடி சிறந்த தலைவராக விளங்குகிறார். பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் மிகப்பெரிய ஆதரவு உள்ளது.
மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக வேண்டுமென அமெரிக்காவில் நிறைய பேர் விரும்புகின்றனர் என நான் நம்புகிறேன்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பாதையில் உள்ளார். ஏனென்றால், மோடி இந்தியாவின் சிறந்த தலைவராவார்.
நான் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ஆதரவாளர் என்பது இந்தியாவில் அனைவருக்கும் தெரியும். அதில் எந்த ரகசியமும் இல்லை' இவ்வாறு அவர் கூறினார்.