ஹேமில்டன் மேயர் ஆண்ட்ரியா ஹோர்வத் சீரற்ற காலநிலையினால் விழுந்து காயம்
கனடாவின் ஹேமில்டன் நகர மேயர் ஆண்ட்ரியா ஹோர்வத், நகர மன்ற கட்டிடத்தின் வெளியே கடும் காற்று சூழ்நிலைகளில் படிக்கட்டில் தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.
ஹோர்வாத், கை முறிவுக்காக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
முதலில், இது ஒரு "விபத்து" எனக் கூறப்பட்டாலும், அவருக்குக் ஏற்பட்ட காயங்கள் பற்றிய விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.[
பின்னர் புதன்கிழமையன்று வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட தகவலில், கை முறிவு உட்பட, முடக்கை எலும்பு முறிவு மற்றும் கால் காயம் தொடர்பாகவும் பரிசோதனை நடந்து வருவதாக அவரது குழு தெரிவித்தது.
டோரோண்டோ பெரும்பாகம் மற்றும் ஹேமில்டன் பகுதிக்காக கனடா வானிலை நிறுவனம் பல வானிலை எச்சரிக்கைகளை வெளியிட்டிருந்தது.
சில பகுதிகளில் 100 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியதாக கூறப்படுகிறது.
இக்காற்று, மரங்களை மற்றும் மின்கம்பிகளை தகர்த்ததன் காரணமாக, சில பகுதிகளில் இன்னும் மின் விநியோகம் சீராகவில்லை.
மேயர் ஹோர்வத் சில நாட்கள் மருத்துவ விடுப்பில் செல்லக்கூடும் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
"சமூகத்தின் அன்பும், பராமரிப்பு பாராட்டும் எங்களுக்குப் பெரும் ஆறுதலாக இருக்கின்றன.
மேயரின் நிலை குறித்து மேலதிக தகவல்கள் கிடைக்கும் போது தொடர்ந்தும் புதுப்பிப்புகளை வழங்குவோம்," என அவரது அலுவலகம் தெரிவித்தது.