பிரான்ஸ் மக்களுக்கு அடுத்த ஆண்டு முதல் மற்றுமொரு நெருக்கடி!
பிரான்ஸில் நவிகோ பயண அட்டையின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக இல் து பிரான்ஸ் பொது போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பையடுத்து, தற்போது மெற்றோ கட்டணங்களும் அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நவிகோ பயண அட்டை 80 யூரோ தொடக்கம் 90 யூரோ யூரோக்கள் வரை இந்த அதிகரிப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மாதாந்த நவிகோ அட்டை 75.20 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், 5 தொடக்கம் 10 யூரோக்களால் இந்த தொகை அதிகரிக்கப்படும் என தகவல் வெளியானது.
இந்த நிலையில் 2023 ஆம் அண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து கிட்டத்தட்ட 21 சதவீதத்தினால் மெற்றோ கட்டணம் அதிகரிப்புக்கு உள்ளாகிறது.
தற்போது 1.90 யூரோக்களாக உள்ள மெற்றோ கட்டணம் 2.30 யூரோக்களாக அதிகரிக்கப்படும் என அறிய முடிகிறது. இந்த கட்டண உயர்வு தொடர்பான வாக்கெடுப்பு செனட் மேற்சபையில் வரும் டிசம்பர் 7 ஆம் திகதி இடம்பெறும் என அறிய முடிகிறது.
இது தொடர்பான கோரிக்கையினை செனட் மேற்சபையினர் அண்மையில் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எப்படியிருப்பினும் இந்த அதிகரிப்பின் ஊடாக 440 மில்லியன் யூரோ மேலதிக வருமானமாக ஈட்ட முடியும் என பிரான்ஸ் பொது போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
எனினும் இந்த நடவடிக்கையினால் பொது மக்கள் ரயில் பயணங்களை குறைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
மக்களுக்கு ரயில் மீதான ஈர்ப்பு குறைந்து வேறு வகையான போக்குவரத்தினை நாடும் நிலைமை ஏற்படும் என கவலை வெளியிடப்பட்டுள்ளது.