வெளிநாடொன்றில் கலப்பட போதைப்பொருளால் 20 பேருக்கு நேர்ந்த பரிதாபம்!
அர்ஜென்டினாவில் கலப்படம் செய்யப்பட்ட கோக்கைன் போதைப்பொருளை பயன்படுத்தியதால் இதுவரையில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 74 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து போதைப்பொருள் விற்பனை செய்ததாக சந்தேகித்த ஒரு கும்பலை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோக்கைனில் கலக்கப்பட்ட பொருள் என்னவென்று இன்னும் தெரியாததால், இறப்புகளைத் தடுக்க அவசர சேவைகள் மற்றும் வைத்தியசாலைகளுடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சகம் பணியாற்றி வருகிறது.
மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோர் தொடர்ந்து இறந்து வருவதால் சமீபத்தில் வாங்கிய எந்த போதைப்பொருள்களையும் பயன்படுத்த வேண்டாமென்று அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.
பிற கும்பலுடனான போட்டியின் காரணமாக கொகைனில் சில பொருட்களை கலந்து, அது நச்சுத்தன்மை கொண்டதாக மாறியிருக்கலாம் என கூறப்படுகிறது.