மெல்பேர்னில் யூத வழிபாட்டுதலத்திற்கு தீவைப்பு
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள யூதர்களின் வழிபாட்டுதலத்திற்கு இனந்தெரியாதவர்கள் தீவைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது , தீயணைப்பு வீராகள் அந்த பகுதிக்கு சென்றவேளை யூதர்களின் வழிபாட்டுதலம் முற்றாக எரியுண்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
அதிகாலை வேளையில் வழிபாட்டிற்காக சிலர் யூதவழிபாட்டுத்தலத்திற்குள் இருந்த சம்யம் தீமூட்டப்பட்டது என சமூக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும் இதில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த செயல் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட வன்முறை என கருதுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் சமூகத்தில் பகைமை உணர்வை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.