திடீரென மயங்கி விழுந்த பிக்பாஸ் போட்டியாளர்! அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 52 நாளை கடந்துள்ள நிலையில் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நீதிமன்ற டாஸ்க் முடிவடைந்திருந்த சூழ்நிலையில், வீட்டில் இருந்து குறைவான வாக்குகளால் ராபர்ட் மாஸ்டர் வெளியேறி இருந்தார்.
இதைத்தொடர்ந்து இவ் வாரம் பிக்பாஸ் வீட்டில் பழங்குடியின மக்கள் vs ஏலியன்ஸ் என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் பழங்குடியின மக்களாக அசீம், ஷிவின், விக்ரமன், ஏடிகே, ராம், விஜே கதிரவன், மைனா ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
ஏலியன்களாக தனலட்சுமி, குயின்ஸி, ஜனனி, அமுதவாணன், ரச்சிதா, ஆயிஷா, மணிகண்டா ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
இந்த டாஸ்க் ஆரம்பித்த நாளிலிருந்து அசீம் சக போட்டியாளர்களுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் (29-11-2022) ஜனனியுடன் மோதலில் ஈடுபட்டு பெரிய பஞ்சாயத்தாக முடிந்தது. அதே போல இன்றைய தினம் தனலட்சுமி அசீம் மீது முட்டை எல்லாம் அடித்து வெறுப்பேற்றினார்.
இவ்வாறான நிலையில் பழங்குடியின மக்கள் vs ஏலியன்ஸ் டாஸ்க் முடிவடைந்ததைத் தொடர்ந்து காரட்ன் ஏரியாவில் அசீம் இருக்கும் போது திடீரென மயங்கி விழுந்து விடுகின்றார். இதனால் கதிரவன் ஏடிகே ஓடிப் போய் பார்க்கின்றனர்.
அத்தோடு தண்ணீர் தெளித்தும் அவர் எழும்பாததால் மெடிக்கல் ரூமுக்கு கொண்டு போகின்றனர்.இதனால் அசீம் ரசிகர்கள் வெகு சீக்கிரத்தில் அசீம் குணமடைய வேண்டும் என கூறி வருகின்றனர்.