ஓமனின் அதிமுக்கிய எண்ணெய் முனையம் அருகே தாக்குதல் ; நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்
ஓமன் நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையங்களில் ஒன்றான மினா அல் பஹால் முனையம் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக முனையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கப்பல் போக்குவரத்துத் தரவுகளின்படி, குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து இன்று பல கச்சா எண்ணெய் கப்பல்கள் துறைமுகத்திற்கு வெளியே கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பு ஒரு டிரோன் தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஈரானிய டிரோன் தான் இந்த தாக்குதலை மேற்கொண்டதா என்று விசாரணை நடந்து வருகிறது.
இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் உடனடியாக வெளியாகவில்லை. மினா அல் பஹால் முனையம் ஓமன் வளைகுடாவில் அமைந்துள்ள மிக முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையம் ஆகும்.
கடந்த புதன்கிழமை ஓமன் வளைகுடாவில் ஈரானிய எல்லைக்கு அருகே வந்த அமெரிக்க ராணுவக் கப்பல் ஒன்றை தாங்கள் தாக்கியதாக ஈரான் தெரிவித்தது. ஆனால், அமெரிக்கா அதை மறுத்தது.