அஸர்பைஜான் விமானம் விபத்து; ரஷ்யா காரணம் என்கிறது அமெரிக்கா!
அஸர்பைஜான் விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யா காரணமாயிருக்கலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் புதன்கிழமை (25) கஸக்ஸ்தானில் விழுந்ததில் 38 பேர் உயிரிழந்தனர்.
அதில் ரஷ்யாவுக்குத் தொடர்பிருக்கலாம் என்பதை முன்னோடிப் புலனாய்வுகள் காட்டுவதாக வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஜான் கெர்பி (John Kirby) கூறினார். புலனாய்வில் அமெரிக்கா உதவியதாகக் கூறினார்.
Caspian கடல் வழியாக கஸக்ஸ்தானுக்குத் திருப்பிவிடப்பட்ட அஸர்பைஜான் விமானம் கசகஸ்தானில் கு விபத்துக்குள்ளானது.
அதற்கு முன் செசன்யாவில் தரையிறங்க முயன்ற விமானம் ரஷ்யாவின் ஆகாயத் தற்காப்புக் கட்டமைப்பின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எனினும் அதுபற்றிக் கருத்துக் கூற கிரெம்ளின் மறுத்துவிட்டது. அதேவேளை , உக்ரேனின் ஆளில்லா வானூர்தித் தாக்குதல் நீடிக்கும் செசன்யாவின் சூழல் மிகவும் சிக்கலானது என்று ரஷ்ய விமானப் போக்குவரத்து அமைப்பு கூறியது.