ஜெர்மனியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடம்!
ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணிநேரத்தில் 42,582 பேர் பாதிக்கப்பட்டதோடு 241 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் இதுவரை மொத்தமாக 58இலட்சத்து 25 ஆயிரத்து 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1 இலட்சத்து 1ஆயிரத்து 652 பேர் மரணமடைந்துள்ளனர்.
ஜெர்மனியில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 8 இலட்சத்து 71ஆயிரத்து 091 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 4,459 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜெர்மனியில் 29,100 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 48 இலட்சத்து 52 ஆயிரத்து 800 பேர் குணமடைந்துள்ளனர்.