உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்பில் இலங்கையை வீழ்த்தி வெற்றிப் பெற்ற பங்களாதேஷ்!
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணி 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றியை பெற்றுள்ளது.
உலகக் கிண்ண தொடர்பின் இன்றைய போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது.
இதன்படி இலங்கை முதலில் துடுப்பொடுத்தாடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 279 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக சரித் அசலங்கா 108 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் தன்சிம் ஹசன் சாகிப், 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இந்த நிலையில் இன்றைய போட்டியில் எஞ்சலோ மேத்யூஸ் துடுப்பாட்டத்தின் போது ஸ்டம்புக்கு வர மிகவும் தாமதமாகிவிட்டதால் 'Time Out' அறிவிப்புடன் Run out வீரராக அறிவிக்கப்பட்டு துரதிஷ்டவசமாக வெளியேறினார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் இதுபோன்ற ஆட்டமிழப்பு இடம்பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து 280 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 41.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியடைந்தது.
பங்களாதேஷ் அணி சார்பில் அதிகபட்சமாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ அதிகபட்சமாக 90 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஷகிப் அல் ஹசன் 82 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் தில்ஷான் மதுசங்க 3 விக்கெட்டுக்களையும், ஏஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக பங்களாதேஷ் அணித் தலைவர் சகிப் ஹல் ஹசன் தெரிவு செய்யப்பட்டார்.