கனடாவில் போதைப் பொருள் விற்பனை செய்த இந்திய மாணவருக்கு சிறைத்தண்டனை
கனடாவில் போதைப் பொருள் விற்பனை செய்த இந்திய மாணவருக்கு 30 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த 26 வயதான மாணவர் மந்தீப் பந்தர், கனடாவில் மாணவர் விசாவில் வந்தவர், கோகைன் மற்றும் ஃபென்டனில் போன்ற போதை மாத்திரைகளை விற்பனை செய்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த குற்றச்சாட்டுக்களை மாணவர் நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022ம் ஆண்டில், குறித்த இந்திய மாணவர் 30 கிராமுக்கும் மேற்பட்ட கோகைன் மற்றும் 10 கிராம் ஃபென்டனில் உடன் கைது செய்யப்பட்டார்.
அந்த நேரத்தில் பந்தர் மற்றும் மற்ற இருவரும் போலீஸ் கண்காணிப்பில் இருந்தனர்.
அவர்கள் Kelowna மற்றும் Vernon பகுதிகளுக்கிடையே Dial-a-Dope போதைப்பொருள் விற்பனைக் குழுவை இயக்கியதாக சந்தேகிக்கப்படுகிறது.
பந்தரின் கைது பின்னர், அப்பார்ட்மெண்டில் நடந்த போலீஸ் சோதனையில் போதைப்பொருள் களஞ்சியங்கள் கைப்பற்றப்பட்டன.
சிறைத்தண்டனையின் பின்னர் குறித்த இந்திய மாணவரை நாடு கடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.