ஹமில்டனில் சமூக ஊடகப் பதவினால் இடைநிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி
கனடாவின் ஹமில்டனில் சமூக ஊடகப் பதிவு காரணமாக பொலிஸ் அதிகாரி ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பக்கச்சார்பான மற்றும் சர்ச்சைக்குரிய வகையில் குறித்த அதிகாரி சமூக ஊடகத்தில் பதிவிட்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சமூக ஊடகப் பதிவுகள்
பொலிஸ் அதிகாரியினால் பதிவிடப்பட்ட சமூக ஊடகப் பதிவுகள் குறித்து ஊடக நிறுவனமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த தகவலைத் தொடர்ந்து குறித்த பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரி கடந்த 23 ஆண்டுகளாக பொலிஸ் சேவையில் ஈடுபட்டு வருபவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் அதிகாரிகள், பாரபட்சமான அடிப்படையில் பொதுவெளியில் கருத்து வெளியிடுவது ஏற்புடையதல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளின் பின்னர் குறித்த அதிகாரி தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.