கனடியரின் நல் உள்ளம் குவியும் பாராட்டு
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் டெய்லர் என்பவர் நன்றி பாராட்டும் இரவு விருந்து உபசாரத்தில் பங்கேற்குமாறு தனக்கு அறிமுகம் இல்லாதவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆறு மாத காலத்திற்கு முன்னதாக தனது குடும்பத்தை இழந்ததாகவும் பல்வேறு நெருக்கடிகளை எதிர் நோக்கியதாகவும் டெய்லர் தெரிவிக்கின்றார்.
மக்கள் தம்மை சுற்றி இருப்பதன் அவசியத்தை உணர்ந்து கொண்டதாகவும் நல்ல உணவை பகிர்ந்து கொள்வதையும் அன்பை பரிமாறுவதும் எவ்வளவு முக்கியமானது என்பது தமக்குத் தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் மக்கள் பயன்படுத்தப்படும் சமூக ஊடக வலைத்தளம் ஒன்றில் விருந்து உபசாரம் தொடர்பான அழைப்பினை அவர் விடுத்துள்ளார்.
இந்த நன்றி பாராட்டும் விருந்துபசார நிகழ்வுகளில் எவரும் தனித்திருக்கக் கூடாது எனவும் தன்னுடன் இணைந்து உணவு உட்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மரணத்தின் விளிம்பை எதிர்நோக்கிய காரணத்தினால் இரண்டாம் வாய்ப்பு எவ்வளவு முக்கியமானது என்பது தமக்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஒரு பின்னணியில் விருந்து உபசாரத்திற்கு செல்லாதவர்களும் அவருக்கு உணவு பொருட்களை நன்கொடையாக வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.