கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த நபர்; இறுதி நேரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம்
கென்யாவைச் சேர்ந்த சமையற் கலை நிபுணர் ஜோன் முல்வா நாடு கடத்தப்படவிருந்த நிலையில், இறுதி நேரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் காரணமாக நாடு கடத்தப்படவில்லை.நாடு கடத்தப்படவில்லை.
ஒன்றாரியோவின் ஹமில்டன் பகுதியில் அனைவரினதும் விருப்பத்திற்குரிய நபராக ஜோன் கருதப்படுகின்றார்.
உயிர் அச்சறுத்தல் காரணமாக ஜோன், எட்டு ஆண்டுகளுக்கு முன்னதாக கென்யாவை விட்டு வெளியேறியிருந்தார்.
தாம் நாடு திரும்பினால் நிச்சயமாக கொலை செய்யப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜோன் ஒன்றாரியோவில் அடைக்கலம் கோரி விண்ணப்பம் செய்து, அந்தப் பகுதி வாழ் மக்களுக்கு பல்வேறு விழகளில் சேவைகளை வழங்கி வருகின்றார்.
குறிப்பாக புலம்பெயர் கென்ய சமூகத்தினருக்கு ஜோன் பல்வேறு வழிகளில் உதவி வருகின்றார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் கடந்த 28ம் திகதி ஜோனை நாடு கடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தப்படவிருந்த நிலையில், இறுதி நேரத்தில் மேலும் 18 மாதங்களுக்கு கனடாவில் தங்கியிருப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.