தாத்தாவானார் பில் கேட்ஸ்!
மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மூத்த மகள் ஜெனிஃபர் கேட்ஸ் - நயெல் நாசர் தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டா கணக்கில் பதிவிட்டு உள்ளார்.
"எங்களின் சிறிய ஆரோக்கியமான குடும்பத்தில் இருந்து அன்பை அனுப்புகிறோம்." என கேப்ஷனுடன் தனது குழந்தையின் புகைப்பட்டத்தை பதிவிட்டார்.
பில் கேட்ஸ் இதே புகைப்படத்தை பில் கேட்ஸ் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, வாழ்த்துக்கள் ஜென் மற்றும் நயெல். நான் மிகவும் பெருமை உடன் இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மெலிண்டா மகிழ்ச்சி
புதிதாக பாட்டி ஆகி இருக்கும் மெலிண்டா ஃபிரென்ச் கேட்ஸ், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். "இந்த உலகிற்கு வரவேற்கிறேன். எனது மனம் பரவசமடைகிறது," என்று அவர் தனது மகளின் பதிவில் கமெண்ட் செய்துள்ளார்.
ஜெனிஃபர் மற்றும் நயெல் நாசர் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தம்பதியின் மூத்த மகள் ஜெனிஃபர் மற்றும் நயெல் நாசர் இடையே 2021 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது.
இருவரும் பல வருடம் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது ஜெனிபர் கேட்ஸ் - Nayel Nassar ஆகியோருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
டிசம்பர் 2022, ஜெனிஃர் கேட்ஸ் தனக்கு நடத்தப்பட்ட சீமந்த புகைப்படங்களை பகிர்ந்து, தாங்கள் பெண் குழந்தையை எதிர்பார்ப்பதாக தெரிவித்து இருந்தார். அவரது பதிவுக்கு பில் கேட்ஸ்,
"எனது மூத்த மகள் நான் அடுத்த ஆண்டு தாத்தா ஆக போகிறேன் என்ற செய்தியை சொன்னதில் இருந்து புதிய லென்ஸ் மூலம் உலகை பார்க்க துவங்கி இருக்கிறேன். " என தெரிவித்திருந்தார்.
அதோடு "நான் தாத்தா ஆக போகிறேன், என டைப் செய்யும் போது எனது மனம் உணர்ச்சிவயப்படுகிறது. மேலும் எனக்கு இந்த எண்ணம் புதிய அனுபவத்தை உணர செய்கிறது.
எனது பேரக்குழந்தை பிறக்க இருக்கும் உலகை பற்றி நினைக்கும் போது, எல்லோருடைய குழந்தை மற்றும் பேரக்குழந்தைகள் வாழ்வதற்கு சிறப்பான சூழலை உருவாக்க உதவ வேண்டும் என்ற ஊக்கம் அதிகரிக்கிறது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.