சீனாவால் தேடப்படும் கோடீஸ்வரர் ஜாக் மா தலைமறைவாக இருக்கும் இடம் அம்பலம்
சீன தொழிலதிபர் ஜாக் மா தமது குடும்பத்தினருடன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இணையவழி வணிக நிறுவனமான அலிபாபா நிறுவனரான ஜாக் மா, சீனாவின் கட்டுப்பாடுகள் தொடர்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனால் அதன் பின்னர் அரிதாக மட்டுமே அவர் பொதுவெளியில் நடமாடியுள்ளார். கடந்த ஆண்டு 48 நொடிகளில் ஒரு காணொளியை வெளியிட்ட ஜாக் மா, தற்போது தலைமறைவு வாழ்க்கை வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஜப்பான் பத்திரிகை ஒன்று மா ஜப்பானில் தங்கியிருந்ததாக தகவல் வெளியிட்டுள்ளது. சுமார் 6 மாத காலம் அவர் ஜப்பானில் தமது குடும்பத்தினருடன் தங்கியிருந்ததாக குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், ஜப்பானில் இருந்து இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் அவர் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சீனாவின் கடும்போக்கு நடவடிக்கைகளால் ஜாக் மாவின் சொத்துமதிப்பு 50 பில்லியன் டொலரில் இருந்து 21.7 பில்லியன் டொலராக சரிவடைந்துள்ளது.
அத்துடன், சீனா நிர்வாகத்திற்கு பயந்து அவர் ரகசிய வாழ்க்கை வாழ்ந்தும் வருகிறார். அவருக்கான பாதுகாப்பு, சமையல் கலைஞர்கள் தொடர்பில் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது.