கனடாவிலிருந்து கிரீன்லாந்துக்குப் புறப்பட்ட படகை காணவில்லை
கனடாவின் லாப்ரடார் மாகாணத்தின் தென்கிழக்கு கடற்கரையோரத்தில் கிரீன்லாந்துக்குப் பயணித்த ஒரு 6 மீட்டர் நீள படகு காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"தொன்னெரே" (Tonnerre) எனும் பெயருடைய இந்த படகு, க்யூபெக்கில் உள்ள ப்லாஞ்ச்-சாப்லான் (Blanc-Sablon) நகரத்திலிருந்து புறப்பட்டு, கிரீன்லாந்தை நோக்கிய தனிப்பட்ட பயணத்தில் இருந்தது.
படகில் ஒரே ஒரு நபர் மட்டுமே இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. ஞாயிற்றுக்கிழமை, ஒரு நபர் செயின்ட் ஜான்ஸ், நியூபவுண்லாந்தில் உள்ள கடற்படை மீட்பு மையத்துக்கு அழைத்ததன் பேரில், இந்தப் படகு வழிதவறியதாக அறியப்பட்டது.
படகின் கடைசி நிலை), நியூபவுண்லாந்திலிருந்து சுமார் 296 கிலோமீட்டர்கள் கிழக்கே கார்ட்ரைட் (Cartwright இருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
தொன்னெரே படகை தேடும் பணிகளில் பல விமானங்களும், "Des Groseilliers" மற்றும் "Amundsen" ஆகிய கடற்படை கப்பல்களும் ஈடுபட்டுள்ளன.
எனினும், தேடுதல் நடவடிக்கைகள் தொடங்கியதிலிருந்து இன்று வரையில் படகு எங்கும் காணப்படவோ, அதிலிருந்து எந்தவொரு தொடர்பும் கிடைத்ததவோ இல்லை என கனடா கடற்படை தெரிவித்துள்ளது.