பங்களாதேஷில் பயங்கரம்; மேம்பாலத்தில் தொங்கவிடப்பட்ட சடலங்கள்
பங்களாதேஷில் அராஜகத்தின் மத்தியில், பிரதான வீதியில் உள்ள மேம்பாலத்தில் தொங்கவிட்டுள்ள பலரது சடலங்களைக் காட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்காளதேசத்தில் தற்போது நாடாளுமன்றத்தை கலைத்துள்ள போதிலும் , எதிர்க்கட்சிகள் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முன்வர மறுத்துவிட்டன. புதிய பாராளுமன்றம் தெரிவு செய்யப்படும் வரை இராணுவம் நாட்டை ஆட்சி செய்கிறது.
எனினும், இராணுவ ஆட்சியை தாங்கள் ஏற்கவில்லை எனவும், அவர்களால் பரிந்துரைக்கப்படும் பேராசிரியரையே ஆட்சியராக நியமிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் தெரிவித்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பங்களாதேஸின் இடைக்கால தலைவராக ஷேக் ஹசீனாவின் நீண்ட கால அரசியல் எதிராளியும் நோபல் பரிசுபெற்றவருமான முகமட் யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.