அமெரிக்காவில ட்ரோன் பயன்படுத்திய கனடியர்
நாடு கடத்தப்பட்டார் அமெரிக்காவில் அனுமதியின்றி ட்ரோன் கமரா பயன்படுத்திய நபர் ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் கனடாவிற்கு நாடு கடுத்தியுள்ளனர்.
ஒன்டாரியோ மாகாணத்தின் பிராம்ப்டன் நகரைச் சேர்ந்த 40 வயது நபர், அமெரிக்காவில் இராணுவ மற்றும் விண்வெளி தளங்களை ட்ரோன் மூலம் படம் எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, கனடாவுக்கு நாடுகடத்தப்பட்டார்.
ஸியாவோ குவாங் பான் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
2025 ஜனவரி 7 ஆம் திகதி ஃப்ளோரிடா மாநிலத்தின் கேப் கானாவெல் விண்வளெி ஆய்வு மையத்திற்கு அருகில் ட்ரோன் இயக்கியபோது கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற ஆவணங்களின்படி, அவர் மூன்று நாட்களில் 1,900-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்திருந்தார் என தெரியவந்துள்ளது.
குறித்த நபர் “முக்கிய பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் உபகரணங்களை” அனுமதியின்றி படம் எடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளுது.
பான், குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக அவருக்கு 75 டொலர் அபராதம் விதிக்கப்பட்டதுடன் அமெரிக்காவிற்கு பயணம் செய்யக் கூடாது என தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தற்போது கனடாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.