கனடாவின் இந்தப் பகுதியில் கடுயைமான காட்டுத்தீ
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வெப்பமும் வறட்சியும் நீடிப்பதால் காட்டுத் தீகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மாகாணம் முழுவதும் 142 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த புதன்கிழமை பதிவு செய்யப்பட்ட 68 தீ விபத்துகளை விட இருமடங்காக அதிகரித்துள்ளது.
இவற்றில் சுமார் 80 சதவீதம் மின்னல் தாக்கத்தால் ஏற்பட்டவையாகும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனினும் ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு மின்னல் அபாயம் குறையும் என்றும், வெப்பநிலை தொடர்ந்து அதிகமாக இருந்தாலும் கடற்கரை பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
காட்டுத் தீகள் அதிகரித்ததையடுத்து, மாகாணத்தின் பல இடங்களில் சிறப்பு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகள் அடுத்த 48 மணிநேரம் வரை காட்டுத் தீ புகைமூட்டத்தால் பாதிக்கப்படக்கூடும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.