ஸ்பெயினில் 60 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்து பிரிட்டிஷ் மலையேற்ற வீரர் உயிரிழப்பு
வடக்கு ஸ்பெயினில் உள்ள கான்டாப்ரியன் மலைத்தொடரில் சுமார் 60 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்த 28 வயதான பிரிட்டிஷ் மலையேற்ற வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டோர்செர்ரெடோ (Torrecerredo) மலையின் உச்சியில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது, அவர் பள்ளத்தில் தவறி விழுந்ததாக ஸ்பெயின் சிவில் காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பாக அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் மற்றும் வான்வழி மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையில் மலையேற்ற மீட்புக் குழுவினர் அவரது உடலை மீட்டுள்ளனர்.
இதனிடையே, ஸ்பெயினில் பிரிட்டிஷ் குடிமகன் ஒருவர் உயிரிழந்ததாக வெளியான தகவல் தொடர்பாக, உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.