பிரிட்டிஷ் ஆண்களே தயவு செய்து வராதீர்கள்; ஆம்ஸ்டர்டாம் மக்கள் புகார்!
பிரிட்டனைச் சேர்ந்த 18 வயது முதல் 35 வயது வரையிலான ஆடவர்களை வரவேண்டாம் என்று கூறும் விளம்பரக் காணொளியை நெதர்லந்தின் ஆம்ஸ்டர்டாம் நகர் வெளியிட்டுள்ளது.
இளம் ஆடவர்கள் சாலைகளில் தள்ளாடுவது, காவல்துறையால் கைது செய்யப்படுவது ஆகிய காட்சிகள் அந்தக் காணொளியில் இடம்பெற்றிருந்தன.
மது அருந்துதல், போதைப்பொருள் உட்கொள்ளுதல்
அளவுக்கு அதிகமாக மது அருந்துதல், போதைப்பொருள் உட்கொள்ளுதல் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை அது எடுத்துக்காட்டியதாக BBCகூறியது.
மதுபோதையில் பொதுஇடத்தில் சிறுநீர் கழிப்பது, வாந்தி எடுப்பது, சண்டைபோடுவது ஆகியவற்றில் பிரிட்டிஷ் ஆண்கள் ஈடுபடுவது குறித்துப் பல ஆண்டுகளாக ஆம்ஸ்டர்டாம் மக்கள் புகார் அளித்து வருகின்றனர்.
எனினும் அது போன்ற விளம்பரங்கள் பாகுபாட்டை வெளிப்படுத்துவதாகச் சிலர் குறைகூறினர். உலகில் ஆக அதிகமான வருகையாளர்கள் கொண்ட நகரங்களில் ஆம்ஸ்டர்டாமும் ஒன்று ஆகும் .
பிரிட்டனிலிருந்து அங்கு செல்வது இன்னும் எளிது. இருவழி விமானச்சீட்டுகள் 62 டாலருக்குக்கூட கிடைக்கும் என கூறப்படுகின்றது.
அதேவேளை ஆண்டுதோறும் சுமார் ஒரு மில்லியன் பிரிட்டிஷ் மக்கள் ஆம்ஸ்டர்டாம் செல்வதாக BBC குறிப்பிட்டது.