ஹூதி கிளர்ச்சியாளர்களால் சவூதியைப் பாதுகாக்க விரையும் பிரித்தானிய போர் வானூர்திகள்
ஹூதி கிளர்ச்சி அமைப்பினரின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், சவூதி அரேபியாவின் வான்வெளியைப் பாதுகாப்பதற்காக பிரித்தானியாவின் ரோயல் வான்படைக்குச் சொந்தமான ‘டைஃபூன்’ போர் வானூர்திகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தநாட்டின் பாதுகாப்புச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஹூதி அமைப்பினரின் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களிலிருந்து சவூதி அரேபியாவின் வான்வெளியைப் பாதுகாப்பதற்காக, பிரித்தானியாவின் டைஃபூன் போர் வானூர்திகள் தற்காப்பு வான் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே சவூதி அரேபியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள பிரித்தானியாவின் இராணுவ உபகரணங்கள் மற்றும் பணியாளர்களின் பங்களிப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹூதி அமைப்பினரின் வான் தாக்குதல்களுக்கு எதிராக சவூதி அரேபியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.