100 பூனைகளுக்கு அடைக்கலம் கொடுத்த பிரித்தானிய பெண்!
பிரித்தானியா - வடக்கு யார்க்ஷயரை சேர்ந்தவர் டினா லூயிஸ் (Tina Lewis)என்ற பெண்ணும் அவரது குடும்பத்தாரும் கடந்த ஆண்டிலிருந்து 100க்கும் மேற்பட்ட பூனைகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக ஆதரவற்றுப்போன பூனைகளுக்கு அவர்கள் அடைக்கலம் கொடுக்க ஆரம்பித்தனர்.
தற்போது லூயிஸ் குடும்பத்தினர் பூனைகளுக்காகவே Filey Cat Rescue எனும் தொண்டூழிய நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
தங்களின் நிறுவனம், கார், கல்யாண மோதிரங்கள் ஆகியவற்றை விற்று நிதி திரட்டியுள்ளனர் இந்தக் குடும்பத்தார்.
இதன்போது பூனைகளுக்கு அடைக்கலம் தருவது எனது வாழ்க்கை லட்சியம். அதனைத் தவிர்த்து நான் வேறு எதுவும் செய்ய விரும்பவில்லை என்று உறுதியாக டினா லூயிஸ்(Tina Lewis) கூறுகிறார்.