காதலன் வீட்டில் பிடிக்காத உணவை கொடுத்ததால் ப்ரேக் அப் செய்த காதலி
காதலன் வீட்டில் தனக்கு பிடிக்காத உணவை பரிமாறியதால் பெண் ஒருவர் ப்ரேக் அப் செய்துள்ள சம்பவம் பன்றி இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் சீனாவில் இடம் பெற்றுள்ளது.
சம்பவம்
பெண் ஒருவர் முதன்முதலாக தனது காதலன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இரண்டு நாட்கள் தங்கியும் உள்ளார்.
மிகவும் நடுக்கத்துடன் காதலன் வீட்டிற்கு சென்ற அவருக்கு காதலனின் பெற்றோரால் மிகுந்த ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. அதனை பதிவாக தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.
தனக்கு பரிமாறப்பட்ட உணவை வீடியோவாகவும் பகிர்ந்துள்ளார். அதில், “எனது காதலனின் குடும்பத்துடன் உணவருந்த அமர்ந்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த உணவை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பொரித்த முட்டைகளுடன் நூடுல்ஸ், பூசணீ போரிட்ஜ், வறுத்த குளிர் உணவுகள் போன்றவையே இடம்பெற்றிருந்தன. இவை சீனாவில் சாப்பிடப்படும் அன்றாட உணவேயாகும்.
முதன்முறை காதலன் வீட்டிற்கு தங்க சென்றிருந்தும் தனக்கு ஸ்பெஷலாக எதுவுமே செய்யவில்லை என்பதை பார்த்து மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார் அந்த பெண்.
இதுகுறித்து காதலனிடம் கேட்டபோது, “ஒரு சாதாரண மனிதன் தினசரி சாப்பிடும் உணவு இது என்று கூறினான். எனக்கு நூடுல்ஸ் பிடிக்காது என்று அவனுக்கு நன்றாக தெரியும். ஆனால் தினமும் அதையே கொடுத்தனர்” என்றும் கூறியுள்ளார்.
இரண்டு நாட்கள் காதலன் வீட்டில் இருந்தபிறகு, காதலை ப்ரேக் அப் செய்யலாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.