நிலநடுக்கத்தில் இடியாத வீடுகளை கட்டுங்கள்; உலகநாடுகளிடம் ஆராய்ச்சியாளர் முன்வைத்த கோரிக்கை
போருக்கு பதிலாக நிலநடுக்கத்தைத் தடுக்கும் வீடுகளைக் கட்டுவதற்குப் பணத்தைச் செலவழிக்க வேண்டும் என துருக்கி, சிரியா நிலநடுக்கத்தை முன்னரே கணித்து எச்சரித்த டச்சு ஆராய்ச்சியாளர் ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் (Frank Hoogerbeets)தெரிவித்துள்ளார்.
துருக்கியில் ஏற்பட்ட வரலாறு காணாத பூகம்பத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,800 என்றளவைக் கடந்துள்ளது.
நூற்றாண்டின் மிக மோசமான இயற்கை பேரழிவு
இந்த நூற்றாண்டின் மிக மோசமான இயற்கை பேரழிவாக இதனை புவியியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலநடுக்கத்தை மூன்று நாட்களுக்கு முன்பு டச்சு புவியியல் ஆராய்ச்சியாளர் ஃப்ராங்க் கூகர்பீட்ஸ்(Frank Hoogerbeets) கணித்திருந்தார்.
இந்த நிலையில் ஃப்ராங்க் கூகர்பீட்ஸ் பதிவிட்ட டுவிட்டர் பதிவு ஒன்று மீண்டும் வைரலாகி உள்ளது. அதில் உலக நாடுகளுக்கு அவர் செய்தி ஒன்றை அளித்திருக்கிறார்.
ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ்(Frank Hoogerbeets) தனது பக்கத்தில்,
“மனிதர்கள் போர் செய்வதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக நிலநடுக்கத்தைத் தடுக்கும் வீடுகளைக் கட்டுவதற்குப் பணத்தைச் செலவழிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அது ஒரு பெரிய முன்னேற்றமாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.