கைது செய்யப்பட்டவரை தாக்கிய கனடிய பொலிஸ் அதிகாரி மீது வழக்கு!
கைது செய்யப்பட்ட நபர் ஒருவரைத் தொடர்ந்து தாக்கியதாக, கலகரி காவல் துறையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் மீது தாக்குதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த 2025-ஆம் ஆண்டு மே 22 திகதி இடம்பெற்றுள்ளது. ஒரு நபரைத் தடுத்துக் காவலில் எடுத்த பிறகு, அந்த காவல் அதிகாரி தனது கைகளினால் பலமுறை தாக்கி, அளவுக்கு அதிகமான வன்முறையைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து கலகரி காவல் துறையின் தொழில்முறை தரக் கட்டுப்பாட்டுப் பிரிவு தீவிர விசாரணை நடத்தியது.

தொடர்ந்து எட்மண்டனில் உள்ள அரசு வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்கப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி இம்ரான் கான் மீது தாக்குதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்காக ஆகஸ்ட் 6-ஆம் திகதி இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.