வார்த்தைகள் வன்முறைக்கு வழிவகுக்குமா? நிபுணர்கள் எச்சரிக்கை
ஈரானியர்களுக்கு எதிரான ட்ரம்பின் வாய்மொழித் தாக்குதல்கள் தீவிரத்திலும் வன்முறையிலும் அதிகரித்து வருகின்றன. இவை வெறும் சொல்லாட்சிகள் மட்டுமல்ல என்று சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச் செயலாளர் அக்னஸ் கலாமார்ட் எச்சரித்துள்ளார்.
ட்ரம்பின் சொல்லாட்சிகள், நிலத்திலுள்ள பொதுமக்கள் மற்றும் பொதுக் கட்டமைப்புகள் மீது குறிவைக்கப்பட்ட, கண்மூடித்தனமான அல்லது விகிதாசாரமற்ற தாக்குதல்களுக்கு வழிவகுக்கின்றன.

இந்த அச்சுறுத்தல்களில் இருந்து மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள முடியும்? இது மிகவும் பயங்கரமானது," என்று சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச் செயலாளர் அக்னஸ் கலாமார்ட், தமது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"எனவே நான் மீண்டும் கேட்கிறேன் இது எங்கே போய் முடியும்? ஈரான், லெபனான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளின் மக்களை முதன்மையான பலிகடாக்களாகவும், தோல்வியுற்றவர்களாகவும் மாற்றும் இந்தத் தீவிரப்போக்கை யார் அல்லது எது நிறுத்தும்? என்றும் சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச் செயலாளர் அக்னஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.