ஹார்முஸ் நீரிணையை மூட ஈரானுக்கு உரிமையில்லை – பஹ்ரைன்
ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்பான தீர்மானத்தின் மீது ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னதாக, பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர் அப்துல்லத்தீப் பின் ரஷீத் அல் ஜயானி (Abdullatif Bin Rashid Al Zayani) உரையாற்றினார்.
உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் மிக முக்கியமான இந்த நீர்வழிப் பாதையில் ஏற்பட்டுள்ள "கடுமையான நிலைக்கு" முற்றுப்புள்ளி வைக்கவே இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
"வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) உறுப்பு நாடுகள் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முதன்மை ஆதாரமாக உள்ளன.

எனவே, ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பு என்பது ஒரு தனிப்பட்ட நாட்டின் விவகாரமல்ல, அது ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும்," என்று அவர் வலியுறுத்தினார்.
இஸ்லாமிய குடியரசான ஈரான், சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு இந்த நீர்வழிப் பாதையை மூடவோ, உலக மக்களுக்கு அவசியமான இந்த வளங்களை முடக்கவோ எந்த உரிமையும் இல்லை என்பதை நாங்கள் உரக்கச் சொல்கிறோம்," என அல் ஜயானி ஆவேசமாகத் தெரிவித்தார்.