கனடாவில் விமான ஓடு பாதையில் திடீரென தீப்பற்றிக் கொண்ட விமானம்!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் சென் ஜோன்ஸில் அமைந்துள்ள பிராந்தயி விமான நிலையத்தில் சிறிய ரக விமானமொன்று ஓடு பாதையில் வைத்து திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது.
இந்த சிறிய ரக விமானம் கண்காட்சி ஒன்றில் பங்கேற்றதன் பின்னர் திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானம் விபத்துக்குள்ளான போதிலும் விமானிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலையத்தின் ஓடுபாதையில் வைத்து விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
என்ன காரணத்தினால் இந்த விபத்து இடம் பெற்றது என்பத இன்னமும் தெளிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானிக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஓடுபாதையில் பயணித்துக் கொண்டிருந்த விமானம் வெடிப்பு ஒன்று பதிவானதாகவும், தீப்பற்றிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீப்பற்றிக் கொண்ட விமானத்தை விமானத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு பிரிவினர் விரைந்து செயல்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்னோபோர்ட் ரக விமானங்கள் பழையவை எனவும் இவற்றை பயன்படுத்துவது ஆபத்தானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அனேகமான விமானங்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.