இஸ்ரேலுக்கான கனடிய ராஜதந்திரிகளது பிள்ளைகள் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்
இஸ்ரேலுக்கான கனடிய தூதரகத்தின் ராஜதந்திர பணியாளர்களது பிள்ளைகளை மீள அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இராஜதந்திரிகள் மற்றும் அவர்களது பிள்ளைகளை மீள அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிராந்திய வலயத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜதந்திரிகளின் பிள்ளைகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்களை பாதுகாப்பான மூன்றாம் நாடு ஒன்றில் தற்காலிகமாக தங்க வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும், இஸ்ரேலுக்கான கனடிய தூதரக பணியாளர்கள் தொடர்ந்தும் இஸ்ரேலில் தங்கியிருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குக் கரை, காஸா, ஜெருசலேம் மற்றும் லெபனான் போன்ற பகுதிகளுக்கான பயணங்களை தவிர்க்குமாறு ஏற்கனவே வெளிவிவகார அமைச்சு கனடியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.