கனடா யாருக்கும் பணிந்து போகாது - கனடியப் பிரதமர் எச்சரிக்கை!
கனடா யாருக்கும் பணிந்து போகாது என கனடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் மற்றும் கனடாவின் பதிலடி வரிகள் குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா முன்வைத்த ஒப்பந்தத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை; அதேபோல் அவர்கள் கேட்டதையும் எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது.
இதன் விளைவாக, எங்களைப் பாதிக்கவும், பிரிக்கவும் திட்டமிட்டு அமெரிக்கா இந்தப் புதிய வரிகளை விதித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து கனடா விலகுவதற்கு நிச்சயமாகச் சில விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.
ஆனால், அமெரிக்காவின் கோரிக்கைகளுக்குப் பணிந்து போவது அதைவிட மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கனடிய மக்களுக்குப் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தச் சவால்களில் இருந்து மீண்டு, கனடா மேலும் வலுவான மற்றும் உறுதியான நாடாக உருவெடுப்பதே இதன் முதன்மை நோக்கம் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வர்த்தகப் போருக்குப் பதிலடி கொடுக்கும் கனடாவின் நடவடிக்கைகள் குறித்துப் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன் மூலம் எந்தவொரு நாடும் இனி கனடாவைப் பிணைக்கைதியாகப் பிடித்து வைக்க முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.