கனடாவுக்கு பறக்க திட்டமிடும் பயணிகளுக்கு முக்கிய தகவல்!
கனடாவுக்கு பயணிக்கும் பயணிகளுக்கு விமானத்தில் ஏறுவதற்கு முன்பு எதிர்மறையான கொவிட்-19 சோதனை முடிவுகள் தேவைப்படும். நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த பயண விதியால், கனடாவுக்கு பறக்க திட்டமிடும் எவரும் புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும், அல்லது அவர்கள் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஐந்து வயது அல்லது அதற்கு மேற்பட்ட அனைத்து பயணிகளுக்கும் இந்த விதி பொருந்தும். அத்தியாவசியமற்ற பயணத்தை ஊக்கப்படுத்துவதற்கான பாதுகாப்பின் மற்றொரு அடுக்கு என்று மத்திய அரசாங்கம் விபரித்த ஒரு நடவடிக்கையில், அமைச்சர் டொமினிக் லெப்ளாங்க் கடந்த வாரம் இந்த தடையை அறிவித்தார்.
14 நாள் தனிமைப்படுத்தப்படல் விதியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. சோதனைத் தேவை முதலில் விவாதிக்கப்பட்டபோது, அது தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு துணைபுரியும் நீளத்தை குறைக்காது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் விளக்கினார்.
சோதனை முடிவு எதிர்மறையான எவரும் இன்னும் 14 நாள் காலத்திற்குத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.