அமெரிக்க ஹெச்-1பி வைத்திருப்போரை அழைக்கும் கனடா!

United States of America India Canada
By Sulokshi Jun 28, 2023 09:49 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  அமெரிக்க ஹெச்-1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களில் 10 ஆயிரம் பேர் கனடா நாட்டிற்கு வந்து பணிபுரிய அனுமதிக்கும் வகையில் பணி அனுமதி (Open Work Permit Stream) எனும் அனுமதியை அந்நாட்டு அரசாங்கம் உருவாக்கும் என்று கனடா குடிவரவு அமைச்சர் ஷான் ஃப்ரேஸர் நேற்று அறிவித்தார்.

இது தொடர்பில் கனடா நாட்டின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இப்புதிய முடிவின் கீழ் வரும்ம் ஜூலை 16 முதல் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 3 ஆண்டுகள் வரை கனடாவில் பணியாற்ற திறந்த பணி அனுமதி (open work permit) பெறுவார்கள்.

அமெரிக்க ஹெச்-1பி வைத்திருப்போரை அழைக்கும் கனடா! | Canada Invites Us H 1B Holders

 3 ஆண்டுகள்   கனடாவில் பணியாற்ற அனுமதி

அவர்கள் கனடாவில் எங்கும் எந்த ஒரு முதலாளியிடமும் வேலை செய்ய முடியும். அவர்களின் வாழ்க்கைத் துணை மற்றும் அவர்களை சார்ந்திருப்பவர்கள் ஆகியோருக்கும் அவர்களின் தேவைக்கேற்ப வேலை அல்லது படிப்பு கிடைப்பதற்கு இந்த தற்காலிக குடியுரிமை விசா வழி செய்கிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிய கனடாவிற்கு வரக்கூடிய வேலையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உலகின் மிகவும் திறமையான நபர்களுக்கான குடியேற்றத்தை கனடாவின் மத்திய அரசு உருவாக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஹெச்-1பி வைத்திருப்போரை அழைக்கும் கனடா! | Canada Invites Us H 1B Holders

இருப்பினும், யார் யார் தகுதி பெறுவார்கள் என்பதை குடிவரவு அமைச்சர் சரியாக விளக்கவில்லை. உயர் தொழில்நுட்ப துறைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளில் இயங்கும் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.

ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி

அமெரிக்காவின் ஹெச்-1பி விசா எனப்படும் அனுமதியானது, அங்கே வெளிநாட்டுப் பிரஜைகள், தொழில்நுட்ப துறை உட்பட சில சிறப்புத் தொழில்களில் தற்காலிகமாக அங்கேயே தங்கி வேலை செய்ய அனுமதிக்கிறது.

அமெரிக்க ஹெச்-1பி வைத்திருப்போரை அழைக்கும் கனடா! | Canada Invites Us H 1B Holders

அதேசமயம் , ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் பணியை இழந்தால் மீண்டும் 60 நாட்களுக்குள் வேறு வேலை தேடிக்கொள்ள வேண்டும் அல்லது அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனும் கட்டுப்பாடு உண்டு.

இந்த சூழ்நிலையில் கனடாவின் இந்த அறிவிப்பு ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியானதாக அமைந்துள்ளது.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US