லெபனானுக்கான பயணங்கள் தொடர்பில் கனேடிய அரசாங்கம் எச்சரிக்கை!
லெபனானுக்கான பயணங்கள் தொடர்பில் கனேடிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போர் பதற்றம் காரணமாக பெலனானுக்கான பயணங்கள் தொடர்பில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லெபனானில் பாதுகாப்பு நிலைமைகள் மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கனேடிய வெளிவிவகார அமைச்சினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போர் உக்கிமடைந்ததன் பின்னர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கான சாத்தியங்கள் வரையறுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபானனில் தங்கியுள்ள கனடியர்கள் வர்த்தக ரீதியான விமானங்களின் ஊடாக அந்நாட்டை வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.