கனடாவில் உணவுப் பொருள் விலை குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு
கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த செப்டம்பர் மாதம் நாட்டில் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வருடாந்த பணவீக்க வீதம் 6.9 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது என கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பணவீக்கம் 7.0 வீதமாக காணப்பட்டதுடன் செப்டம்பர் மாதம் அது சற்றே குறைவடைந்துள்ளது.
எரிபொருட்களின் விலைகள் குறைவடைந்தாலும் பணவீக்கம் வெகுவாக குறைவடையவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் மளிகைப் பொருட்களின் விலைகள் 11.4 வீதமாக உயர்வடைந்துள்ளது.
இது கடந்த 1981ம் ஆண்டின் பின்னர் பதிவான மிக அதிகளவான மளிகைப் பொருள் விலை அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பத்து மாதங்களாக தொடர்ச்சியாக கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.