கனடாவில் சிறப்பாக இடம்பெற்ற “நீ வாழ நான்” நூல் வெளியீட்டு விழா!
கனடாவில் உள்ள ரொறன்ரோ பகுதியில் “நீ வாழ நான்” என்ற நூல் வெளியீட்டு விழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
ஆமைத்தீவு என்றழைக்கப்பட்ட, அழைக்கப்படுகின்ற வட அமெரிக்காவின் ஆதிக்குடிகளான புது கிரெடிட்ஆற்றின் மிஸிஸாகா, அனிஷினாபே (Anishinaabe), சிப்பேவா, ஹோடெனஷோனீ (Haudenosaunee), வென்டாட் ஆகியோரின் மரபுவழி மண்ணில் கூடியிருக்கிறோம்.
இன்றைய ரொறன்ரோ இப்போதும் பூர்வ குடிகள், இனுஇட் மற்றும் மேட்டி மக்களின் வாழ்விடமாக அமைந்துள்ளது.
ரொறன்ரோ 13வது ஒப்பந்தத்தின் கீழ் மிசிசாகஸ் ஆஃப் தி கிரெடிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதையும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
இந்த மண்ணிலும் இந்தச் சமூகத்திலும் வாழவும் இயங்கவும் கிடைத்த வாய்ப்புக்காக, நாங்கள் இந்த மண்ணுக்கும் அதன் ஆதிக் குடிகளுக்கும் கடப்பாடு உடையோராக இருப்போம் எனும் உறுதியோடு, இந்த மண்ணின் ஆதிக்குடிகளுக்கு எம் உணர்வுத் தோழமையைத் தெரிவித்துக்கொண்டு இன்றைய நிகழ்வைத் தொடங்குகிறோம்.
3. கனடிய. தேசிய கீதம்.
4. தமிழ்த்தாய் வாழ்த்து
5. மங்கள விளக்கேற்றல்
1. வண பிதா ரோசான் அடிகளார் 2. திரு, திருமதி ஜெயராசசிங்கம் 3. நூல் வெளியீட்டின் தலைவர் கனடிய தமிழ் வானொலி சிரேஷ்ட அறிவிப்பாளர் திரு இராஜ முகுந்தன் 4. முனைவர் வாசுகி நகுலராஜா 5. ஊடகவியலாளர் ஆறுமுகராசா சபேஸ்வரன் 6. கவிஞர் சசிகலா ஜீவானந்தம் 7. ஆசிரியர் திரு சண்முகநாதன் கஜேந்திரன் 8. சிமியோன் ரெனிஸ்லஸ் 9. தேவராசா டேனி்கோட் 10. திரு இராஜப்ப 11. மாடிகிராஸ் மண்டப உரிமையாளர் ஜெகன்நாதன் கணபதிநாதன் 12. ஊடகவியலாளர், சுவிஸ் ஊடக மையத்தின் தலைவர் நூலாசிரியர் ஜெராட் ஜெயராசசிங்கம் மற்றும் திருமதி ஜெராட்
6. அகவணக்கம்.
தமிழீழ விடுதலைப்போரிலே வீரச்சாவடைந்த மாவீரர்களையும், சிறிலங்கா இந்தியப்படைகளாலும் இரண்டகராலும் கொல்லப்பட்ட மக்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்துவோமாக. நிறைவு செய்வோம்.
7. வரவேற்புரை. திருமதி டேனிஷ்கோட் யசோதா
8. தலைமை உரை. ஊடகவியலாளர், கவிஞர், நேரடி வர்ணனையாளர், ஆசிரியர் கனடிய தமிழ் வானொலி சிரேஷ்ட அறிவிப்பாளர் திரு இராஜ முகுந்தன்
9. ஆசியுரை வணபிதா றோசான் அடிகளார்
10. நூலாசிரியர் அறிமுகம் ஊடகவியலாளர், யாழ் தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்தவரும், நூலாசிரியர் ஜெராட்டின் நண்பருமான திரு ஆறுமுகராசா சபேஸ்வரன்
11. நூல் அறிமுகம், கவிஞர் சசிகலா ஜீவானந்தம் கனடா அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ் இளங்கலைப்பட்டதாரி. தஞ்சைப்பல்கலைக்கழக முதுகலை மாணவி. கவிஞர், அறிவகப்பாடசாலையின் அதிபர், கனடா தொல்காப்பிய மன்ற அங்கத்தாவராகவும், எழுத்தாளர் இணைய அங்கத்தாவராகவும் உள்ளார்.
அத்துடன் கடந்த இரண்டு தசாப்பதங்களாக லோகன் மருத்துவமனையின் நிர்வாகப் பொறுப்பாளராக, வரவேற்பாளராக கடமையாற்றினார். தற்போது ஆய்வுகூட தொழில்நுட்ப வல்லுனராக கடமையாற்றுகிறார்.
12. வெளியிட்டுரை. ஆசிரியர் திரு சண்முகநாதன் கஜேந்திரன்
13. நூல் வெளியீடு. 1. திருமதி ஜெயராசசிங்கம் திரேசம்மா 2. முதல் பிரதியை வழங்குகிறார். திரு ஆரோக்கியநாதன் ஜெயராசசிங்கம் 3. முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார் திருமதி ஜெராட் தர்மிகா
14. நூல் விமர்சனம் முனைவர் . திருமதி. வாசுகி நகுலராஜா விரிவுரையாளர், அண்ணாமலை பல்கலைக்கழகம் -கனடா வளாகம், Policy Advisor- Ontario Government, PhD – Tamil, M A – Tamil, M A- Linguistic TVi தொலைக் காட்சியில் “மலரும் மொட்டுக்கள்” முன்னைநாள் சிறுவர் நிகழ்ச்சித் தாயாரிப்பாளர் எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர். ஆய்வாளர்சிறப்பு பிரதிகள்
15. நூலாசிரியர் ஏற்புரை ஊடகவியலாளர், சுவிஸ் ஊடக மையத்தின் தலைவர் நூலாசிரியர் ஜெராட் ஜெயராசசிங்கம் (விருந்தினர் மதிப்பளிப்பு)
16. நன்றி உரை
திருமதி ஜெராட்