பிரான்ஸ் பயணம் தொடர்பில் கனடா விடுத்துள்ள எச்சரிக்கை

France Canada
By Balamanuvelan Jul 01, 2023 03:04 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

Report

பிரான்சில் 17 வயது இளைஞர் ஒருவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பெரும் கலவரம் வெடித்துள்ளதால், பிரான்ஸ் செல்லும் கனடா நாட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்சில் வெடித்துள்ள கலவரம்

செவ்வாய்க்கிழமை காலை, பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் புறநகர் பகுதியான Nanterre என்னுமிடத்தில், விதிகளை மீறியதாக ஒரு காரை பொலிசார் நிறுத்தச் சொல்லியதாகவும், அந்தக் காரின் சாரதி காரை நிறுத்தாமல் சென்றதாகவும் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, பொலிசார் அந்தக் காரை ஓட்டிய சாரதியை சுட்டுக்கொன்றுள்ளனர். அந்த சாரதியின் பெயர் Nahel (17), அவர் அல்ஜீரியா மற்றும் மொராக்கோ பின்னணிகொண்டவர் என தெரியவந்துள்ளது.

அந்த இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த கலவரம் தொடர்பாக பாரீஸில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

பிரான்ஸ் பயணம் தொடர்பில் கனடா விடுத்துள்ள எச்சரிக்கை | Canada Travel Advisory

கனேடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை 

பிரான்சில் வெடித்துள்ள கலவரம் தொடர்பாக பிரான்ஸ் செல்லும் கனேடியர்களுக்கு கனடா பயண ஆலோசனை ஒன்றை வெளியிட்டுள்ளது.

2023, ஜூன் 27 முதல், பிரான்சில் பொலிஸ் வன்முறைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

மேலும் நாடு முழுவதும், பல நகரங்களில் பேரணிகளுக்கு திட்டமிடப்பட்டுவருகிறது. இதனால், போக்குவரத்து மற்றும் பொது சேவைகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

அதனால், சூறையாடல், தீவைப்பு மற்றும் பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையிலான வன்முறைகள் ஆகியவை நிகழ்ந்துவருகின்றன என்கிறது கனடா வெளியிட்டுள்ள அறிக்கை.

ஆகவே, பிரான்சுக்கு செல்லும் கனேடியர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறும், ஏற்கனவே பிரான்சிலிருக்கும் கனேடியர்கள் உள்ளூர் ஊடகங்கள் உதவியுடன், நடக்கும் விடயங்கள் குறித்து அவ்வப்போது தெரிந்துவைத்துக்கொள்ளுமாறும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுரையின்படி பயணத்திட்டங்களை செயல்படுத்துமாறும் கனடா அரசு கனேடியர்களை அறிவுறுத்தியுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US