தடுப்பூசி விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவந்த கனடா
கனடா நாட்டில் தற்போது தடுப்பூசி விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அதன்படி எதிர் வரும் நவம்பர் 30ஆம் திகதி முதல் கனடாவுக்குள் நுழைய அனுமதி பெற்ற கனேடியர்களும் மற்றவர்களும் முழுமையாக தடுப்பூசி பெட்ரா நிலையிலும் அவர்கள் கனடாவிலிருந்து வெளியேரிவிட்டு, அடுத்த 72 மணி நேரத்திற்குள் நுழைவோருக்கு மூலக்கூறு கொரோனா பரிசோதனை தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது பல கட்ட மாற்றங்களை கொண்ட கனடாவின் புதிய தடுப்பூசி விதிமுறையானது,
நீங்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றவர் என அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், குறைந்தபட்சம் இரண்டு டோஸ்கள் கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியோ அல்லது கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளைக் கலந்தோ (a mix of 2 accepted vaccines) போட்டுக்கொண்டிருக்கவேண்டும்.
அல்லது, ஒரு டோஸ் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும். உங்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி, நீங்கள் கனடாவுக்குள் நுழைவதற்கு 14 நாட்கள் முன்பு போடப்பட்டிருக்கவேண்டும்.
ArriveCAN ஆப்பில் நீங்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டதற்கான ஆதாரத்தை நீங்கள் பதிவேற்றம் செய்திருக்கவேண்டும். அவற்றிற்கான ரசீது, பரிசோதனை முடிவு முதலான ஆதாரங்களை உங்களுடன் வைத்திருக்கவேண்டும். உங்களுக்கு, கொரோனா அறிகுறிகள் எதுவும் இருக்கக்கூடாது.
எந்தெந்த தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டவை?
பைசர் (Comirnaty, tozinameran, BNT162b2)
மொடெர்னா (Spikevax, mRNA-1273)
ஆஸ்ட்ராசெனகா (Vaxzevria, COVISHIELD, ChAdOx1-S, AZD1222)
ஜான்சன் அண்ட் ஜான்சன் (Ad26.COV2.S)
பாரத் பையோடெக் (Covaxin, BBV152 A, B, C)
சினோபார்ம் (Beijing) BBIBP-CorV (Vero Cells)
சினோவாக் (CoronaVac, PiCoVacc)