கனடாவில் வீழ்ச்சியடைந்து செல்லும் பிறப்பு வீதம்
கனடாவில் தொடர்ச்சியாக பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கினை பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் மொத்தப் பிறப்பு விகிதம் (Fertility Rate) தொடர்ந்து குறைந்து, கடந்த ஆண்டில் பெண் ஒருவருக்கு 1.25 குழந்தைகள் என்ற வரலாற்று பின்னடைவை எட்டியுள்ளது.
கனடா புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட தரவுகள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

2023 இல் முதன்முறையாக பெண் ஒருவருக்கு 1.3 குழந்தைகளுக்குக் குறைவான விகிதத்தை பதிவு செய்திருந்தது.
பெண் ஒருவருக்கு 1.3 குழந்தைகளுக்கும் குறைவான விகிதம் “Ultra-low fertility” என வகைப்படுத்தப்படுகிறது.
இதே தரத்தில் உள்ள நாடுகளில் சுவிட்சர்லாந்து, லக்ஸ்சம்பர்க், பின்லாந்து, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா ஆகியவை அடங்குகின்றன.
1950களின் இறுதியில் பெண் ஒருவருக்கு 4 குழந்தைகள் என்ற உச்ச நிலையை எட்டியிருந்த கனடா, அதிலிருந்து தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.