கனேடிய விளையாட்டு வீரர்கள் பலருக்கு உடல் நல பாதிப்பு
ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட கனேடிய விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு வயிற்று உபாதை ஏற்பட்டுள்ளதால், போட்டிகளில் கலந்துகொள்வதில் அவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, ஓட்டப்பந்தயம் மற்றும் சைக்கிள் பந்தயங்களில் கலந்துகொண்ட பல வீரர் வீரங்கனைகளுக்கு வயிற்று உபாதைகள் ஏற்பட்டுள்ளன.
இது தொடர்பாக கனேடிய விளையாட்டு வீரர்கள் அமைப்பு சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தியில், sprint என்னும் குறைதூர ஓட்டப்பந்தய வீராங்கனையான Zoe Sherar, 400 மீற்றர் பந்தயத்தில் கலந்துகொள்ளும் முன் வைரஸ் ஒன்றின் தொற்றால் ஏற்பட்ட வயிற்று உபாதையால் பாதிக்கப்பட்டார்.
ஆகவே, அவரால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அவர் வெள்ளிக்கிழமை 4x400 மீற்றர் ரிலேயில் கலந்துகொள்ளவேண்டியுள்ளது.
விளையாட்டு வீரர் வீராங்கனைகள் மட்டுமல்ல, பயிற்சியாளர்கள் உட்பட சுமார் 10 முதல் 15 பேர் வயிற்று உபாதையால் பாதிக்கப்பட்டுள்ளதாக Zoe தெரிவித்துள்ளார்.
அவரைப்போலவே, மூன்று முறை 100 மீற்றர் தடை தாண்டும் ஓட்டத்தில் கனடா அளவில் சேம்பியன் பட்டம் பெற்றவரான Michelle Harrisonம் முதன்முறையாக ஒலிம்பிக்கில் கலந்துகொண்டுள்ளார்.
Michelle Harrisonம் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், sprint என்னும் குறைதூர ஓட்டப்பந்தய வீரரான Aaron Brown, மற்றும் நடைப்போட்டி வீரரான Evan Dunfee ஆகியோரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அத்துடன், கனேடிய சைக்கிள் பந்தய வீரர்கள் அணியும் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள்.
உணவு மற்றும் தண்ணீர் மூலம் பரவக்கூடிய Campylobacter jejuni என்னும் பாக்டீரியாவே பிரச்சினைக்கு காரணம் என கண்டறியப்பட்டாலும், அந்த பாக்டீரியா எப்படி விளையாட்டு வீரர்களை தொற்றியது என்பது தெரியவரவில்லை.