பிரபல கனேடிய ஸ்னைப்பர் உக்ரைனில் கொல்லப்பட்டாரா? வெளிவந்த உண்மை
ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்ட பிரபல கனேடிய ஸ்னைப்பர் உக்ரைனில் ரஷ்ய துருப்புகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானதாக கூறப்பட்ட தகவலின் உண்மை பின்னணி வெளியாகியுள்ளது.
ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டவர் வாலி என்ற புனைப்பெயரில் அறியப்படும் பிரபல கனேடிய ஸ்னைப்பர். கனடா இராணுவத்தின் சார்பில் இவர் ஈராக்கில் பணியாற்றியதுடன், பின்னர் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
தற்போது உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு நடத்திய நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார் ஸ்னைப்பர் வாலி. இந்த நிலையில், கடந்த வாரம் ரஷ்ய துருப்புகளின் தாக்குதலுக்கு இலக்கானதாகவும் ஸ்னைப்பர் வாலி கொல்லப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.
தற்போத், அந்த தகவல்கள் அனைத்தும் கட்டுக்கதை எனவும், தாம் ரஷ்ய துருப்புகளின் தாக்குதலுக்கு இலக்கானது உண்மை தான் எனவும், ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு, மீண்டும் போரில் களமிறங்க இருப்பதாக அவர் கனேடிய செய்தி ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். தாம் கொல்லப்பட்டதாக ரஷ்ய துருப்புகளே கட்டுக்கதைகளை பரப்புவதாக குறிப்பிட்ட அவர், தாங்கள் ரஷ்ய துருப்புகளால் குறிவைக்கப்பட்டது உண்மை தான் என தெரிவித்துள்ளார்.
உக்ரைன் துருப்புகளுடன் இணைந்து பணியாற்றுவது சிறப்பு என குறிப்பிட்டுள்ள அவர், கடந்த சில நாட்களில் ரஷ்ய துருப்புகளை வேட்டயாடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், கடந்த வாரம் தாம் ஒருசில முறை ரஷ்ய துருப்புகளால் குறிவைக்கப்பட்டது உண்மை தான் என்பதையும் ஸ்னைப்பர் வாலி ஒப்புக்கொண்டுள்ளார்.