கனடிய மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்
எதிர்வரும் காலங்களில் கனடாவில் அடிக்கடி காட்டுத்தீ, புயல் காற்று போன்றன ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மனித நடத்தையினால் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக இவ்வாறு அடிக்கடி இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் சாத்தியம் உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடிய மத்திய அரசாங்கம் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா முதல் மானிட்டோபா வரையில் இந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகும் என இயற்கை வளங்கள் அமைச்சர் ஜொனதன் வில்கின்சன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் தற்போதைய காலத்தில் மேற்கு கனடாவில் அதிக அளவு காட்டுத்தீவு சம்பவங்கள் பதிவாவது வழமைக்கு மாறானது என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறு எனினும் காலநிலை மாற்றம் காரணமாக இவ்வாறு அடிக்கடி காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாவதாக தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்பொழுது சுமார் 474 காட்டு தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை சுமார் 900 ஆக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காட்டு தீ காரணமாக பழங்குடி இன மக்கள் அதிக அளவு பாதிப்புகளை சந்திப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு வழிகளில் பாதிக்கப்படுவதாகவும் அவர்களது இயல்பு வாழ்க்கையில் பெரும் தாக்கம் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காட்டுத்தீ பாரிய புயல் காற்று போன்றனவற்றிக்கு கனடியர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.