விலைவாசி உயர்வை எதிர்கொள்வதற்காக கனேடியர்கள் மேற்கொள்ளும் உத்தி
விலைவாசி உயர்வை எதிர்கொள்வதற்காக கனேடியர்கள் பலர் தள்ளுபடிக் கடைகளை நாடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒரு காலத்தில், காலாவதி திகதி பார்த்து பொருட்கள் வாங்கும் நாட்டு மக்களில் கனேடியர்களை சேர்க்காமல் இருக்கமுடியாது.

ஆனால், இன்று, best-before திகதி முடிவடைந்திருந்தாலும், அதையும் வாங்கிப் பார்க்கலாமே என்னும் எண்ணம் கனேடியர்கள் பலருக்கு உருவாகியுள்ளது.
அதாவது, விலைவாசி உயர்வால், எந்த பொருட்கள், குறிப்பாக மளிகைப்பொருட்கள் விலை குறைவாகக் கிடைக்கும் என பார்த்து வாங்கத் துவங்கியுள்ளார்கள் கனேடியர்கள்.
கனடாவில், Liquidation Marie போன்ற தள்ளுபடிக் கடைகளில் 50 சதவிகிதம் வரை குறைவான விலையில் மளிகைப்பொருட்கள் கிடைக்கின்றன.
ஆகவே, அத்தகைய தள்ளுபடிக் கடைகளை நாடும் கனேடியர்கள் எண்ணிக்கை அதிகரிக்க, அதற்கேற்ப கனடாவின் பல இடங்களில் தள்ளுபடிக் கடைகளின் கிளைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தவண்ணம் உள்ளது.

இந்த தள்ளுபடிக்கடைகளில் மளிகைப்பொருட்கள் விலை குறைவாகக் கிடைப்பதால், அவை தரமற்ற பொருட்கள் என்று கூறிவிட முடியாது.
அதாவது, பெரிய பல்பொருள் அங்காடிகள் தங்கள் தேவைக்கு அதிகமான பொருட்களை வாங்கிவிடும்போது, best-before திகதி முடிவடைய இருக்கும் பொருட்களை தள்ளிவிடும்போது, அவற்றை இந்த தள்ளுபடிக் கடைகள் வாங்கி குறைந்த விலைக்கு விற்கின்றன.
மக்களும், தாங்கள் வழக்கமாக வாங்கும் அதே பொருள் இந்தக் கடைகளில் விலை குறைவாக கிடைப்பதால், அவற்றை வாங்க முட்டி மோதுகிறார்கள்.
ஆக, ஐந்து ஆண்டுகளுக்கு முன்வரை best-before திகதி முடிந்துவிட்டது, அந்தப் பொருள் வேண்டாம் என எண்ணிய கனேடியர்கள் பலர், இன்று, விலைவாசி காரணமாக, இந்தப் பொருள் விலை குறைவாக இருக்கிறதே, இதை வாங்கி பயன்படுத்திப் பார்க்கலாமே என யோசிக்கும் நிலை வந்துவிட்டது என்கிறார் துறைசார் நிபுணர் ஒருவர்.