கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தை ரத்து செய்யுங்கள்!
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி உலகமெங்கும் மக்கள் விடுமுறைக்கு திட்டமிட்டு வருகிற தருணத்தில் அவற்றை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையினை உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tetros Adanom) கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வாழ்க்கையே இரத்தாகி விடுவதைவிட ஒரு நிகழ்வுஈரத்து செய்யப்படுவது சிறந்தது.
இப்போது கொண்டாடி பின்னர் வருத்தப்படுவதை விட, கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தை பின்னர் கொண்டாடலாம் எனவும் அவர் கூறினார். அதோடு வரும் 2022ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டு வருவோம்” என கூறினார்.
“டெல்டாவை விட ஒமைக்ரோன் குறிப்பிடத்தக்க அளவில் கணிசமாக பரவுகிறது என்பதற்கு சான்றுகள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மற்றும் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மீண்டும் தொற்றுக்கு ஆளாகலாம் என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் குறிப்பிட்டார்.