பிரிட்டிஷ் கொலம்பியாவின் முக்கியஸ்தர் ஒருவருக்கு கொடிய நோய்
பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வர் ஜோன் ஹோர்கனுக்கு (John Horgan) புற்று நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜோன் ஹோர்கனுக்கு (John Horgan) புற்று நோய் ஏற்பட்டமை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதற்கான சிகிச்சைகள் எதிர்வரும் வாரங்களில் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வருகிற டிசம்பர் மாததிற்குள் தனக்கான சிகிச்சைகள் பூர்த்தியாகும் என எதிர்பார்ப்பதாக ஹோர்கன் (John Horgan) தெரிவித்துள்ளார். சிகிச்சை பெறும் காலங்களில் நிகழ்நிலை தொழில்நுட்பங்களின் ஊடாக கூட்டங்களில் பங்கேற்பதற்கு உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
புற்று நோய் ஏற்பட்டதாக அறிந்து கொண்டதும் தமக்காக பிரார்த்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ஹோர்கன் (John Horgan) தெரிவித்துள்ளார்.