சுவிட்சர்லாந்தில் கஞ்சா பயன்பாடு குறித்த புதிய சட்டம்
சுவிட்சர்லாந்தில் காஞ்சா பயன்பாடு தொடர்பில் புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி முதல் சுவிட்சர்லாந்தில் மருத்துவ தேவைகளுக்காக கஞ்சா பயன்படுத்த முடியும்.
தற்பொழுது மருத்துவ தேவைகளுக்காக கஞ்சாவை பயன்படுத்துவோரும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை எதிர்நோக்க நேரிடுகின்றது.
மருத்துவ தேவைகளுக்காக கஞ்சாவை பயன்படுத்துவதற்கு பிரத்தியேகமாக அரசாங்கத்திடம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
எனினும் ஆகஸ்ட் மாதம் முதல் மருத்துவ பயன்பாட்டுக்காக கஞ்சா பயன்படுத்தும் நடைமுறை இலகுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்லாயிரக் கணக்கான நோயாளிகள் நன்மை அடைவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
புற்று நோய் உள்ளிட்ட பல நாட்பட்ட நோய்களுக்கான சிகிச்சைகளுக்காக இவ்வாறு கஞ்சா பயன்படுத்தப்படுகின்றது.
எவ்வாறெனினும், மருத்துவ தேவைகளைத் தவிர்ந்த வேறும் தேவைகளுக்கு இந்த கஞ்சாவை பயன்படுத்த முடியாது அது சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது.